கிரிக்கெட்

டெல்லி அணிக்கு எதிரான வெற்றி: பெங்களூரு கேப்டன் கூறியது என்ன ?

பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதி யது.

புதுடெல்லி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றி ரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டே யத்தில் அரங்கேறிய 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதி யது.

இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியை பெங்களூரு வேகப்பந்து வீச் சாளர்கள் புவனேஷ்வர்குமாரும், ஹேசில்வுட்டும் சீர்குலைத்தனர்.

ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனதால் அதை இருவரும் துல்லிய மாக பயன்படுத்தி டெல்லி பேட்டர்களை மிரட்டினர். இதனால் டெல்லி அணி 16.3 ஓவர்களில் 75 ரன்னில் சுருண்டது. நடப்பு சீசனில் ஒரு அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

ஹேசில்வுட் 4 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 6.3 ஓவர் களில் ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி தொடர்பாக பேசிய பெங்களுரு கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது,

விக்கெட் செயல்பட்ட விதம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதற்கான முழுப் பெருமையும் பந்துவீச்சாளர்களையே சேரும். குறிப்பாக பவர்பிளேயில் ஹேசில்வுட், புவனேஷ்வர்குமார் பந்துவீசிய விதம் பார்ப்பதற்கு மிகவும் பிரமாதமாக இருந்தது . எங்களுக்கு ஆரம்பத்திலேயே விக்கெட் கிடைத்தது, அதனால்தான் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது. வெவ்வேறு வீரர்கள் முன்வந்து அணிக்காக சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அது எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறி என்று நான் நினைக்கிறேன். என தெரிவித்துள்ளார்.