கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சுடன் மோதியது.
அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் கொல்கத்தா அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.
வெற்றி தொடர்பாக பேசிய கொல்கத்தா கேப்டன் ரகானே கூறியதாவது,
மிகச் சிறந்த ஆட்டம். இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.பேட்டிங்கைத் தொடங்கிய விதம் அருமையாக இருந்தது. பின் ஆலன், அங்கிரிஷ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் ஆட்டத்தைப் பார்ப்பது அற்புதமாக இருந்தது. அந்த பார்ட்னர்ஷிப். அந்த முனைப்பு. மேலும் ஒவ்வொரு முறையும் தரமான பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. அது அற்புதமாக இருந்தது. எனவே, இந்த பாராட்டுக்கள் பேட்ஸ்மேன்களுக்கே சேரும். ஒவ்வொரு ஆட்டத்தையும் தனித்தனியாகக் கையாள்வது பற்றியே பேச்சு இருந்தது.என தெரிவித்தார்.