ஜெய்ப்பூர்,
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது;
”இன்று எங்கள் வீரர்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளுமே சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம். அதனால் போட்டி எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஒரு கேப்டனாக, இதைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
பவர்பிளேயில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வைபவ் மற்றும் ஜெய்ஸ்வலின் விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றியது மகிழ்ச்சியளித்தது. ஸ்டார்க், கிரிக்கெட்டின் ஜாம்பவான். மூன்று மாத ஓய்வுக்குப் பிறகு, திரும்பி வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை இது காட்டுகிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.