டெல்லி,
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது;
”சொந்த மண்ணில், தோல்விக்கு பிறகு வெற்றி பெறுவது சிறப்பான விஷயம். ரசிகர்கள் எங்களை ஆதரிக்க வருகிறார்கள். அதனால் இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இன்று எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு உதவியது. அதன் காரணமாகவே எங்களால் போராடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.
பல போட்டிகளில், பவர்பிளேக்கு பிறகு நாங்கள் மீண்டு வந்து சிறப்பாக பந்துவீசியுள்ளோம். டைம் அவுட்டின் போது, 'எந்த நேரத்திலும் மீண்டு வரலாம்' என்று நாங்கள் பேசிக்கொண்டோம். இந்த போட்டியில் மிடில் ஓவர்களில் நாங்கள் அதை செய்தோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.