Image Courtesy: @BCCI 
கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன..?

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது.

துபாய்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்தத் தொடர் 2025- 2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. புள்ளிகளின் சதவீதம் அடிப்படையில் அணிகள் தரவரிசைப்படுத்தப்படும். அதன்படி ஆஸ்திரேலியா 100 சதவீதத்துடன் முதல் இடத்திலும், இலங்கை அணி 66.67 சதவீதத்துடன் 2-வது இடத்திலும் உள்ளது.

இந்தியா 61.90 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. 4 முதல் 9 இடங்கள் முறையே இங்கிலாந்து (43.33), வங்காளதேசம் (16.67), வெஸ்ட் இண்டீஸ் (0.00), நியூசிலாந்து (0.00), பாகிஸ்தான் (0.00), தென் ஆப்பிரிக்கா (0.00) ஆகிய அணிகள் உள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக்கு 12 புள்ளிகள், சமனுக்கு 4 புள்ளிகள், டையுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும். இதில் புள்ளிகள் கழிக்கும் விதிமுறையும் உள்ளது. அதன்படி மெதுவாக ஓவர் வீசினால் 2 புள்ளிகள் கழிக்கப்படும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு 2 புள்ளிகள் கழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT