கிரிக்கெட்

வெற்றிக்குப்பின் உணர்ச்சி வசப்பட்ட சூர்யகுமார்… ரசிகர்களை நெகிழ வைத்த தருணம் - வைரல்

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த செயல் அனைவரையும் கவர்ந்தது.

சென்னை,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த செயல் அனைவரையும் கவர்ந்தது. போட்டி முடிந்த உடனே மைதானத்தின் நடுப்பகுதிக்குச் சென்று, மண்ணை கையால் தொட்டு நெற்றியில் பூசினார். தாய்நாட்டு மண்ணுக்கு அவர் காட்டிய இந்த மரியாதை ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் நினைவுகளை இந்த வெற்றி மறக்கச் செய்துள்ளது. அதே மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடர் முழுவதும் கேப்டன் சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி பாராட்டும் வகையில் அமைந்தது. போட்டிகளின் முக்கிய தருணங்களில் அவர் செய்த பந்து வீச்சு மாற்றங்கள் மற்றும் தந்திரமான முடிவுகள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. குறிப்பாக இறுதிப்போட்டியில் எடுத்த முக்கிய முடிவுகள் அணிக்கு வெற்றியைத் தேடி தந்தன. "அடுத்து ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு" என்று சூர்யகுமார் கூறியுள்ளார்.