கிரிக்கெட்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி: விராட் கோலிக்கு ஆறுதல் கூறிய மனைவி அனுஷ்கா

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது.

அகமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், இந்திய வீரர்களும் ஆட்டகளத்தில் கண்ணீருடன் சென்ற வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இந்திய வீரர் விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆறுதல் கூறியது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பட்ஜெட்டில் கேரளா கடுமையாக புறக்கணிப்பு; மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு ஆளுங்கட்சி அழைப்பு

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

பிஜி நாட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் சட்ட மந்திரிகளின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு

செசல்ஸ் நாட்டின் ஜனாதிபதி 5-ந்தேதி இந்தியா வருகை; சென்னை, மும்பைக்கும் பயணம்

அன்பு நண்பர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி - பிரதமர் மோடி