கிரிக்கெட்

ஒருநாள் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து சென்றடைந்தார் விராட் கோலி

ஆக்லாந்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கோலியை பார்க்க ரசிகர்கள் திரண்டனர்.

ஆக்லாந்து,

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர் விராட் கோலி, நியூசிலாந்துக்கு சென்றடைந்தார்.

டி20 தொடர்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது. கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

நியூசிலாந்து சென்ற விராட் கோலி

டி20 தொடர் முடிவடைந்த உடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி வருகிற நவம்பர் 4-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர் விராட் கோலி, நியூசிலாந்துக்கு சென்றடைந்தார். ஆக்லாந்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கோலியை பார்க்க ரசிகர்கள் திரண்டனர். அப்போது சில ரசிகர்கள் செல்பி எடுக்கவும், ஆட்டோ கிராப் பெறவும், கைகுலுக்கவும் முயன்றனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர்.

SCROLL FOR NEXT