கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமானார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்து வெற்றிகரமாக 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கோலி, உலகக் கிரிக்கெட்டின் முன்னணி பேட்டராக உருவெடுத்துள்ளார்.

டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடி அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தனது 18 ஆண்டுகாலப் பயணத்தில் 28,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து, சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கோலி நீடிக்கிறார். 2027 உலகக்கோப்பைத் தொடரே இவரது கிரிக்கெட் பயணத்தின் இறுதித் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.