கிரிக்கெட்

விராட் கோலி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்: ரவி சாஸ்திரி

தலைசிறந்த வீரர் என்று முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் (ஒருநாள் மற்றும் டி20) எல்லா காலத்திலும் தலைசிறந்த வீரர் என்று முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து சுப்மன் கில்லுடன் இணைந்த விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய கோலி 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இறுதியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் கோலி விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. கடந்த 7 முதல் 10 ஆண்டுகளில் அவர் விளையாடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று . மற்ற வீரர்களுக்கு கடினமாக இருந்த ஆடுகளத்தில் கோலி தனது பேட்டிங் திறமையால் ஆட்டத்தின் தரத்தையே உயர்த்தினார். மேலும், ரன்கள் குவிக்கும் வேகம், சதங்கள், சேஸிங்கில் வெற்றிகளைப் பெற்றுத்தரும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் விராட் கோலிதான் தலைசிறந்த வீரர் என்றும் தெரிவித்தார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் கோலி ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரால் இன்னும் அந்தப் போட்டி வடிவத்தில் சிறப்பாக விளையாட முடியும் என்று ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT