பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், இந்த தொடருக்காக விராட் கோலி நேற்று பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை பெங்களூரு அணி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.