கிரிக்கெட்

எல்லாம் ஓகே... அந்த ஒரு விசயத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை - வைபவுக்கு விவிஎஸ் லட்சுமணன் கொடுத்த அட்வைஸ்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார்.

மும்பை,

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளர் வி.வி.எஸ். லட்சுமணன் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. இதன் காரணமாக, 3 போட்டிகளுக்கு பிறகு அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

ஜிம்பாப்வே தொடரில் அசத்திய வைபவ்

அதன்பிறகு ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, தனது திறமையை நிரூபித்தார்.

இந்த தொடரில் அவர் 2 அரைசதங்கள் பதிவு செய்து இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி 'ஒயிட்வாஷ்' செய்ய முக்கிய பங்காற்றினார். மேலும், அவரது சிறப்பான ஆட்டத்துக்காக 'தொடர் நாயகன்' விருதும் வழங்கப்பட்டது.

உடல்தகுதியை மேம்படுத்த வேண்டும்

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட வி.வி.எஸ். லட்சுமணன் , வைபவின் ஆட்டத்தை பாராட்டியதோடு, அவரது உடல்தகுதி குறித்து முக்கிய அறிவுரையும் வழங்கினார்.

3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வைபவ் தனது ஒட்டுமொத்த உடல்தகுதியை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். தனது ஆட்டத்தின் ஒவ்வொரு துறையிலும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவரிடமும் இருக்கிறது," என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT