துபாய்,
ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையே துபாயில் கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் டி20 தொடரும், அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடத்த முடிவானது. இரு அணிகள் இடையிலான டி20 போட்டிகள் மார்ச் 13, 15, 17 ஆகிய தேதிகளில் ஷார்ஜாவிலும், தொடர்ந்து, மார்ச் 20, 22, 25 ஆகிய தேதிகளில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டிகளை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், வளைகுடா நாடுகளில் போர் வெடித்துள்ளதால், ஆப்கன், இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போட்டிகளை தள்ளிவைப்பது என முடிவானது.