சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் டேவிட் வார்னர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் குற்றவாளி என சிட்னி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் வார்னருக்கு 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பயன்படுத்தும் காரில் ‘இன்டர்லாக்’ (Interlock) கருவியை பொருத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த கருவி, டிரைவரின் மூச்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டால், காரின் இன்ஜின் ஸ்டார்ட் ஆகாமல் தடுக்கும் வகையில் செயல்படும்.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, சிட்னியின் கிழக்குப் பகுதியில் வார்னர் கார் ஓட்டிச் சென்றார். அப்போது போலீசார் நடத்திய சோதனையில், அவரது உடலில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக ஆல்கஹால் இருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வழக்கு, கடந்த மாதம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.