கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: வாஷிங்டன் அபார பந்து வீச்சு - சான் பிரான்சிஸ்கோ 126 ரன்களுக்கு ஆல் அவுட்

ஜாக் எட்வர்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கியது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 19வது லீக் ஆட்டத்தில் வாஷிங்டன் பிரிடம், சான் பிரான்சிஸ்கோ யுனிகான்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

126 ரன்களுக்கு ஆல் அவுட்

இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சான் பிரான்சிஸ்கோ முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், வாஷிங்டன் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சான் பிரான்சிஸ்கோ அணி 19.3 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்புடன் ஆடிய அந்த அணியின் கேப்டன் மேத்தியூ ஷாட் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார்.

சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் அணியின் ஜாக் எட்வர்டு 3.3 ஓவரில் 13 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வாஷிங்டன் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.