கிரிக்கெட்

கம்பீர் முகத்தில் புன்னகையை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்: சூர்யகுமார் யாதவ்

இந்தியா 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

மும்பை,

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சூர்யகுமார். 'முதல்முறையாக அவருடன் இணைந்து அணியை தேர்வு செய்வது குறித்து ஆலோசித்த போது, இருவரும் பரிந்துரைத்த 15 வீரர் களில் 14 பெயர்கள் ஒன்று போல் இருந்தன. அதில் இருந்து எங்களது சிந்தனையும், எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி இருந்தது புரிந்தது. இலக்கு கள் தெளிவாக இருக்கும் போது. அங்கு தேவையற்ற விவாதத்துக்கு இட மில்லை. ஆலோசனை மட்டுமே இருக்கும். அவரை செல்லமாக 'கவுத்தி பாய்' என்றே அழைப்பேன். இது ஒரு அண்ணனுக்கும், தம்பிக்கும் இடை யிலான உறவு போன்றது.

உலகக்கோப்பை போட்டியின் போது அவரை சிரிக்க வைக்க பலமுறை முயற்சித்தோம். ஆனால் எங்களது ஆட்டங்கள் தொடக்கம் முதல் இறு திப்போட்டி வரை விறுவிறுப்பாகவும், மிகவும் தீவிரமாகவும் இருந்தன. எது எப்படியோ இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு, அவரது முகத் தில் புன்னகையை பார்த்ததும், நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்' என்றார்.