கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட நாங்கள் தயார் - சூர்யகுமார் யாதவ்

மும்பை,

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக . மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது,

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடமாட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை; அவர்கள் தான் இந்தியாவுடன் விளையாடமாட்டோம் என்றார்கள். ஐசிசி போட்டியை திட்டமிட்டுள்ளது, நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட தயாராக இருக்கிறோம். எங்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, நாங்கள் டெல்லிக்குப் பிறகு கொழும்புக்குச் செல்வோம் . என தெரிவித்தார்.