வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி தனது முழுத் திறமையில் 50 சதவீதத்தைக்கூட வெளிப்படுத்தவில்லை என்று அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்கதேச அணி 0-1 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து சாண்டோ கூறுகையில், "நாங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை முதலில் ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். இந்த டெஸ்ட் தொடரில் வழக்கமாக விளையாடும் அளவில் 50 சதவீதத்தைக்கூட எங்களால் வெளிப்படுத்த முடியவில்லை. எங்களுடைய திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தியிருந்தால் முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கலாம்
எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சு எடுபடவில்லை. குறிப்பாக, சிலெட் மைதானத்தில் பந்து முன்கூட்டியே சுழலும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடைபெறவில்லை. இருப்பினும், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தின் காரணமாக தோல்வியடையவில்லை . பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் தங்களது செயல்பாடு சிறப்பாக அமையவில்லை.
தொடர்ந்து பல்வேறு தொடர்களில் விளையாடுவதால் வீரர்களின் பணிச்சுமையைச் சரியாக நிர்வகிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சாண்டோ குறிப்பிட்டார். எந்த வீரர் எந்தத் தொடரில் விளையாட வேண்டும்,
முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்ததால் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.