கவுகாத்தி,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறி இருப்பதாவது;
”நாங்கள் வீச வேண்டிய பந்துகளைச் சரியாக வீசவில்லை. ராஜஸ்தான் அணியினர் நன்றாக விளையாடினார்கள். ஒரு பந்துவீச்சுக் குழுவாக, நாங்கள் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படவில்லை. எங்கள் பேட்டிங்கைக் குறை கூற மாட்டேன். ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.
சூர்யவன்ஷி விளையாடுவதைப் பார்க்கையில் மிகவும் வியப்பாக உள்ளது. அச்சமின்றி அவர் அடிக்கும் ஷாட்களை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்திற்கு நன்றாகத் தயாராக வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.