கிரிக்கெட்

திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தினோம்: இங்கிலாந்து கேப்டன்

2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இதியடுத்து, 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 11.4 ஓவர்களில் வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி படுதோல்வியடைந்தது.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், வெற்றி தொடர்பாக இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் கூறியதாவது,

தகவல் பரிமாற்றம் மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் இரண்டாம் பாதிக்கான திட்டமிடலும் தகவல்களும் கச்சிதமாக அமைந்திருந்தன. பேட்டிங்கின்போது நாங்கள் சூழலுக்கு ஏற்ப மிக நன்றாகவே செயல்பட்டோம். கடினமான ஆடுகளமாக மாறும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அந்தப் புரிதலை எங்கள் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படுத்தியது அருமையாக இருந்தது.ஆட்டத்தின் தொடக்கத்தில் சவாலாக இருந்த ஆடுகளத்தில், எங்களை 200 ரன்கள் வரை கொண்டு சென்றது ஒரு மிகச்சிறந்த முயற்சியாகும்.நாங்கள் வகுத்த திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினோம். என தெரிவித்தார்.