அகமதாபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி கள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரன் வித்தியாசத்தில் குஜராத்தின் மோசமான தோல்வி இதுவாகும். குஜ ராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் கூறுகையில், 100 ரன்களை விட (99 ரன்கள் வித்தியாசம்) மிக குறைவான வித்தியா சத்தில் தோற்போம் என்று எதிர்பார்த்தேன். எங்க ளிடம் இருக்கும் பேட்டிங் வரிசைக்கு இவ்வளவு வித்தியாசத்தில் தோற்பதை ஏற்க முடியாது. நான் ஆடிய காலத்தில் 50 ஓவர் கிரிக்கெட்டில் 100 ரன்கள் என்பது கிட்டத்தட்ட ஒரு வெற்றிக்கு ரிய மொத்த ரன்களாக இருந்தது.
இது எங்களுக்கு மிகவும் மோசமான நாள். ககிசோ ரபடாவின் (3 விக்கெட்) பந்து வீச்சு தவிர வேறு எதுவும் எங்களுக்கு சரியாக அமைய வில்லை. அதனால் சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியாக வேண்டும்' என்றார்.