சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்ப ரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.சென்னை அணி தரப்பில் அன்ஷூல் கம்போஜ் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும். ராமகிருஷ்ணா கோஷ், ஜாமி ஓவர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 11 ரன்னில் (9 பந்து, 2 பவுண்டரி) பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரையான் ரிக் கெல்டனிடம் சிக்கினார். இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்கார ரான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்த உர்வில் பட்டேல் தன்பங்குக்கு 24 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்த நிலை யில் கசன்பார் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
இதைத்தொடர்ந்து கார்த்திக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் கைகோர்த்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 18.1 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் மும்பையை 2-வது முறையாக சென்னை அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு தொடரில் 2-வது அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்க ளுடனும் (48 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), முதல் அரைசதம் விளாசிய கார்த்திக் ஷர்மா 54 ரன்களுடனும் (40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், வெற்றி தொடர்பாக பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் கூறியதாவது,
உண்மையில், நன்றாக இருக்கிறது.ஒரு தரமான அணிக்கு எதிரான ஒரு பெரிய வெற்றி, அதனால் நிச்சயமாக இது நன்றாக இருக்கிறது. கம்போஜ் செயல்முறையை மிகச் சிறப்பாகப் பின்பற்றுபவர், ஆடுகளம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்பவர். மேலும், நூர் அகமது போன்றவர்களுக்குச் சற்று வேகமும், இது போன்ற ஆடுகளங்களும் தேவைப்பட்டன. அவர் சில மாற்றங்களைச் செய்து, மிகச் சிறப்பாக முன்னேறியுள்ளார் என்று நான் நினைக்கிறேன். இனிவரும் காலங்களில் எங்களுக்கு இது ஒரு நல்ல அறிகுறி. தவறுகள் நடக்கத்தான் செய்யும், ஆனால் ஆட்டத்தில் மிகச் சிறப்பாக மீண்டு வருவதை உறுதிசெய்து, இந்த ஜெர்சிக்காகவும், ரசிகர்களுக்காகவும் நமது முழு உழைப்பையும் கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும். எனவே, அவர்களுக்காகவே, 100 சதவீதத்திற்கும் மேலாகக் கொடுக்க முயற்சிப்போம். என தெரிவித்தார்.