வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 2026-27 சீசனுக்கான வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மேத்யூ போர்டு, அமீர் ஜாங்கூ ஆகிய வீரர்கள் தல்முறையாக ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.
மேத்யூ போர்டு கடந்த ஓராண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அமீர் ஜாங்கூ, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 233 ரன்கள் எடுத்ததுடன், ரோஸ்டன் சேஸுடன் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 401 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார்.
இதற்கிடையே, ஜான் கேம்ப்பெல் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 2025-26 சீசனில் இந்தியாவுக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த அவர், கவுகாத்தியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் சதமடித்தார். இந்த ஒப்பந்தங்கள் அக்டோபர் 1, 2026 முதல் செப்டம்பர் 30, 2027 வரை அமலில் இருக்கும்.