கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: வங்கதேச வீரர் விலகல்

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

டாக்கா,

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இந்தக் காயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இந்த ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள புதிய காயம் அவருக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT