கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து நாளை மோதல்

முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.

கயானா,

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த சனிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.

2வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

கயானாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மிச்செல் சாண்டனர் தலைமையிலான நியூசிலாந்து அணி ஷேய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.