கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 194/3

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. கரீபியனில் உள்ள டிரினிடாட் & டொபாகோ குடியரசு நாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

194 / 3

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கவெம் ஹட்ஜ் அதிகபட்சமாக 83 ரன்களுடன் களத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.