கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இலங்கை

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஜமைக்கா,

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை 1-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை கைப்பற்றியது. டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.

லஹிரு உதாரா சிறப்பான ஆட்டம்

இந்நிலையில, இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர் லஹிரு உதாரா அதிகபட்சமாக 188 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.