ஜமைக்கா,
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை 1-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற 2 டி20 ஆட்டங்களிலும் தலா 1 வெற்றியுடன் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிகளில் சம நிலையில் உள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஜமைக்காவில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.