மும்பை,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து மோதின. இதில் , இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியப்பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது,
இந்த வெற்றி உணர்வு நம்பமுடியாததாக உள்ளது. இந்தியாவில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் உலகக்கோப்பையில் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தபோதும் அவர் நிலையாக ஆடினார். இதைத்தான் அணியும் எதிர்பார்க்கிறது.
2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணியும் சிறப்பாக ஆடியது. உங்களுக்கு எதிராக நாங்கள் எவ்வளவு ரன்கள் தான் அடிக்க வேண்டும் என்று ஹேரி புரூக் இடம் கேட்டேன். பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிற பவுளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
இங்கிலாந்து ரன் சேசிங்கின்போது நான் மிகுந்த பதற்றமாக இருந்தேன். எனது இதயதுடிப்பு நிமிடத்திற்கு 160 - 175 ஆக கூட இருந்திருக்கும். அரையிறுதிப்போட்டி மிகவும் சிறப்பாக இந்தது. நாங்கள் மகிழ்ச்சியாக இறுதிப்போட்டிக்கு செல்கிறோம்
என்றார்.