கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான வெற்றிக்கு காரணம் என்ன ? கம்மின்ஸ் பதில்

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.

மக்கே,

ஆஸ்திரேலியா–வங்காளதேசம் இடையிலான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மக்கேவில் நடைபெற்ற இந்தப் போட்டி வெறும் இரண்டு நாட்களிலேயே முடிந்தது. இதன் மூலம் முதல் டெஸ்டில் சந்தித்த அதிர்ச்சி தோல்விக்குப் பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.என தெரிவித்தார்.

வெற்றி தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது,

அனைவரும் மிகவும் சிறப்பாகவும் துடிப்புடனும் செயல்பட்டதாக நினைக்கிறேன். இ. ஆடுகளம் நன்றாகத்தான் இருந்தது. முதல் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் ஒரு அணி சிறப்பாக செயல்பட்டால், அது போட்டியின் எஞ்சிய பகுதிக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐந்து செஷன்களுக்குள் போட்டி முடியும் அளவுக்கு ஆடுகளம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் சில டெஸ்ட் போட்டிகள் இப்படித்தான் வேகமாக முடிகின்றன மேலும், எங்கள் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்ததது. முதல் சில மணி நேரங்களிலேயே ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது அவருக்கு மகிழ்ச்சியளித்தது.