கிரிக்கெட்

இது என்னடா சோதனை...நேற்று அறிமுகமான சென்னை அணி வீரருக்கு காயம்

ராமகிருஷ்ணா கோஷ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்ப ரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.சென்னை அணி தரப்பில் அன்ஷூல் கம்போஜ் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும். ராமகிருஷ்ணா கோஷ், ஜாமி ஓவர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சென்னை அணியின் ராமகிருஷ்ணா கோஷ் சிறப்பாக பந்துவீசினார்.

இந்த நிலையில் ராமகிருஷ்ணா கோஷ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை அணி பயிற்சியாளர் பிளெமிங் கூறியதாவது,

அவரது முன்னேற்றமும் தெளிவாகத் தெரிகிறது. அவர் மிகவும் நன்றாகப் பயிற்சி செய்து வருகிறார். சிறப்பாக விளையாடுகிறார். இறுதியில் அவருக்குக் காயம் ஏற்பட்டது ஏமாற்றமளித்தது. என தெரிவித்தார்.