துபாய்,
மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ஹாமன்பிரீத் கவுர் கூறியதாவது,
நாம் என்ன செய்ய வேண்டும், நம்முடைய பலம் என்ன என்பதை நம்பி விளையாட வேண்டும். எந்த அணி பலமானது, எந்த அணி பலவீனமானது என்பது முக்கியமல்ல. அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ, அந்த அணிதான் வெற்றி பெறும்.
அணியில் இருக்கும் ஒவ்வொரு வீராங்கனைகளும் மிகவும் முக்கியமானவர். அவர்களின் பங்களிப்பு எங்களுக்கு மிகவும் மதிப்புடையது. யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அவர்கள் சிறப்பாக விளையாடுவது மிகவும் நல்ல விஷயம்.
எங்களுக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டபோதும், எங்கள் பேட்டிங் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு தேவையான ரன்களை சேர்த்துள்ளனர். அதேபோல், நாங்கள் பந்துவீசும்போதும், எங்கள் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.என தெரிவித்தார்.