சென்னை,
2027 ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை எப்போது? வெளியாகும் என்பது குறித்த தகவல்வெளியாகி உள்ளது.
ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.
அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி, நவம்பர் 21-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த நிலையில், 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.