புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. அட்டவணை எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வரும் 12ம் தேதி வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது முதற்கட்ட அட்டவணை மட்டும் வெளியாக உள்ளது.