கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் ? ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு

இதே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

லண்டன்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 9 முதல் 13 வரை லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், தொடர்ச்சியாக நான்காவது முறையாக இங்கிலாந்தே இறுதிப்போட்டியை நடத்தும் நாடாக மாறியுள்ளது.

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 2வது முறையாக தி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 2023-ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 9 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இறுதிப்போட்டிக்கான இடத்தைப் பெறும் அணிகளை தீர்மானிக்கும் போட்டிகள் அடுத்த சில மாதங்களில் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளன.