கிரிக்கெட்

மும்பை அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வென்ற சென்னை அணி வீரர் யார் ?

சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்ப ரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.சென்னை அணி தரப்பில் அன்ஷூல் கம்போஜ் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும். ராமகிருஷ்ணா கோஷ், ஜாமி ஓவர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 11 ரன்னில் (9 பந்து, 2 பவுண்டரி) பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரையான் ரிக் கெல்டனிடம் சிக்கினார். இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்கார ரான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்த உர்வில் பட்டேல் தன்பங்குக்கு 24 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்த நிலை யில் கசன்பார் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் கைகோர்த்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 18.1 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் மும்பையை 2-வது முறையாக சென்னை அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

நடப்பு தொடரில் 2-வது அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்க ளுடனும் (48 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), முதல் அரைசதம் விளாசிய கார்த்திக் ஷர்மா 54 ரன்களுடனும் (40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு வழங்கப்பட்டது. பார்ம் இல்லாமல் தவித்து வந்த ருதுராஜ் கெயிக்வாட் மீண்டும் சிறப்பாக விளையாடுவது சென்னை அணிக்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது.