கிரிக்கெட்

இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் இவரா ?

சூர்யகுமார் யாதவின் பதவி அயர்லாந்து தொடருக்கு முன்னதாக முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் அயர்லாந்து சென்று அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டி யில் (26, 28-ந் தேதி) விளையாடுகிறது. அதன் பிறகு அடுத்த மாதம் (ஜூலை) இங்கிலாந்தில் பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்த போட்டிக் கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி ஆலோசித்து அணியை முடிவு செய்கின்றனர்.

தற்போது இந்திய டி20 ஓவர் அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவின் பதவி அயர்லாந்து தொடருக்கு முன்னதாக முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. கடந்த பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடந்த டி20 உலகக் கோப்பையை அவரது தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. ஆனாலும் 35 வயது சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அணியின் எதிர்காலம் கருதி அவருக்கு அணியில் இருந்து கல்தா கொடுக்க தேர்வு குழுவினர் முடிவு செய்து விட்டனர்.

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக 31 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.