கிரிக்கெட்

இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் ? பெங்களுரு - குஜராத் இன்று மோதல்

முதலாவது தகுதி சுற்றில் இன்று மோதுகின்றன.

தர்மசாலா,

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளி), குஜராத் டைட்டன்ஸ் (18), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18), ராஜஸ்தான் ராயல்ஸ் (16) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் புள்ளிபட்டியலில் டாப்-2 இடங்களை பெற்ற அணிகளான நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், 2022-ம் ஆண்டு சாம் பியனான குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) மோதுகின்றன. இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இந்த ஆட்டம் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழை யும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும்.

இவ்விரு அணிகளும் நடப்பு தொடரில் ஏற்கனவே 2 முறை மோதி இருக் கின்றன. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத் தில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போல் ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் பதிலடி கொடுத்தது. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.