கிரிக்கெட்

புள்ளிப்பட்டியலில் முன்னேறப்போவது யார்? - ராஜஸ்தான் - குஜராத் அணிகள் இன்று மோதல்

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

ஜெய்ப்பூர்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இதுவரை 51 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (சென்னை, குஜராத், மும்பை, பெங்க ளூரு, லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு எதி ராக), 4 தோல்வியுடன் (2 முறை ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு எதிராக) 4-வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களமாக தொடங்கிய அந்த அணி அடுத்த 6 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்து சற்று தடுமாறுகிறது.

ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி (ஒரு சதம், 2 அரைசதத்துடன் 404 ரன்கள்), ஜெய்ஸ்வால் (3 அரைசதத்துடன் 312), துருவ் ஜூரெல் (3 அரைசதத்துடன் 290), டோனவன் பெரேரா (229) கேப்டன் ரியான் பராக் (207) சூப்பர் பார்மில் இருக்கின்றனர். பந்து வீச் சில் ஜோப்ரா ஆர்ச்சர் (15 விக்கெட்), ரவி பிஷ்னோய் (11) நல்ல நிலை யில் உள்ளனர். நன்ரே பர்கர், ரவீந்திர ஜடேஜா, பிரிஜேஷ் ஷர்மா ஆகி யோரும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமான தாகும்.

குஜராத் அணியும் 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (டெல்லி, லக்னோ, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதி ராக) கண்டு 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி 3 ஆட்டங் களில் தொடர்ச்சியாக வென்ற உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் கால் பதிக்கிறது.

குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 385 ரன்கள்), சுப்மன் கில் (3 அரைசதத்துடன் 378), ஜோஸ் பட்லர் (2 அரைசதத்துடன் 335), வாஷிங்டன் சுந்தர் (209) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ராகுல் திவேதியா ஆட்டம் எதிர்பார்த்தபடி இல்லை. பந்து வீச்சில் ககிசோ ரபடா (16 விக்கெட்), முகமது சிராஜ் (11), ரஷித் கான், ஜாசன் ஹோல்டர் மிரட்டுகிறார்கள்.

குஜராத்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் அணி தீவிரம் காட்டும். 7-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.