கிரிக்கெட்

ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் பெங்களூரு-குஜராத் இன்று மோதல்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆமதாபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ண யிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத் தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் கம்பீரமாக வெற்றி நடைபோடுகிறது. லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை பந்தாடி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் பெங்க ளூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட்டில் பின்தங்கியதால் 2-வது இடம் பிடித்தது.முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதி ராக 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டில் கோப்பையை வென்ற அணிக்கு ரூ.20 கோடி யும், 2-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.12% கோடியும் பரிசுத் தொகை யாக வழங்கப்பட்டது. இதே பரிசுத் தொகை இந்த சீசனிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.