கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கோப்பை யாருக்கு? இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

இந்திய அணி, நடப்பு சாம்பியனான பர்ஹான் யூசுப் தலைமையிலான பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

மஸ்கட்,

8 அணிகள் இடையிலான 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியனான பர்ஹான் யூசுப் தலைமையிலான பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இறுதி ஆட்டத்தில்

கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப் பற்றிய பாகிஸ்தான் அணி நடப்பு தொடரிலும் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. அந்த தோல்விகளுக்கு பதி லடி கொடுத்து 9-வது முறையாக மகுடம் சூடும் வேட்கையுடன் இந்திய அணி களம் காண்கிறது.

இந்திய அணி

இந்திய அணியில் பேட்டிங்கில் ஆர்யவிர் ஷேவாக் (ஒருசதம் உள்பட 303 ரன்), கேப்டன் லக்ஷயா ராய்சந்தானி (163), வினீத் (132), அர் ஜூன் ராஜ்புத்தும் (111). பந்து வீச்சில் இஷான் சோத் (11 விக்கெட்). மனால் சவுகானும் (5) நல்ல நிலையில் உள்ள னர். இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1,3,4 சேனல் கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

SCROLL FOR NEXT