கிரிக்கெட்

சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது ஏன் ? தேர்வுக்குழு தலைவர் பதில்

நடப்பு ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டியில் அணியை கேப்டனாக வழிநடத்தி சென்று கோப்பையை வென்றார்.

மும்பை,

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாடுகிறது.இந்த போட்டிகளில், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டு உள்ளார். நடப்பு ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டியில் அணியை கேப்டனாக வழிநடத்தி சென்று கோப்பையை வென்றார்.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெறவில்லை. சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியதாவது,

உலகக் கோப்பையை வென்ற உடனேயே இது ஒரு கடினமான முடிவுதான். ஆனால், பெரும்பாலான உலகக் கோப்பைகளுக்குப் பிறகு நடப்பது போலவே, இனி முன்னேறுவதற்கான சிறந்த வழி எது என்பதை நாங்கள் மறுமதிப்பீடு செய்ய முயற்சி செய்துள்ளோம் .அடுத்த இரண்டு ஆண்டு காலத்தையும், அல்லது அடுத்த உலகக் கோப்பையும் கருத்தில் கொண்டு, இதுவே முன்னேறுவதற்கான சிறந்த வழி என்று நாங்கள் நினைத்தோம். ஸ்ரேயாஸ் அய்யர் முற்றிலும் தகுதியான கேப்டன். என தெரிவித்தார்.