கிரிக்கெட்

அணி மாறுகிறாரா அக்சர் படேல்? - அப்டேட் கொடுத்த டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர்

அக்சர் படேல் மற்றொரு அணிக்கு டிரேடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

புதுடெல்லி,

அக்சர் படேல் தொடர்ந்து டெல்லி அணியில் விளையாடுவார் என்று அந்த அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் மற்றொரு அணிக்கு டிரேடு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

அக்சர் படேல்

அக்சர் படேலை டெல்லி அணியிலிருந்து வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்வம் காட்டுவதாகவும், அவருக்குப் பதிலாக டெவால்ட் பிரெவிஸ் டெல்லி அணிக்கு வரலாம் என்றும் தகவல்கள் பரவின.

இந்தச் சூழலில், அக்சர் படேல் தொடர்ந்து டெல்லி அணியில் விளையாடுவார் என்று அந்த அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீடிப்பார்

மேலும், டெல்லி அணி இனி எந்த வீரரையும் மற்ற அணிகளுக்கு டிரேடு செய்யத் திட்டமிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் அக்சர் படேல் மட்டுமின்றி, டிரேடு செய்யப்படலாம் எனப் பேசப்பட்ட மற்றொரு வீரரான அஷுதோஷ் சர்மாவும் டெல்லி அணியிலேயே நீடிப்பார் என தெரிகிறது.

SCROLL FOR NEXT