கிரிக்கெட்

இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா பெங்களூரு ? உபி வாரியர்ஸ் அணியுடன் இன்று மோதல்

பெங்களூரு அணி மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து இருக்கிறது.

வதோதரா,

5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் 2-வது அணியாக நுழையும்.

இதுவரை பெங்களூரு (10 புள்ளி) அணி மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றிரவு (வியாழக்கிழமை) 7.30 மணிக்கு நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கடைசி இடத்தில் உள்ள உ.பி.வாரியர்சை எதிர்கொள்கிறது.இன்றைய தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த பெங்களூரு தீவிரம் காட்டும்.