கிரிக்கெட்

அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா ? சென்னை அணி பயிற்சியாளர் பதில்

தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை தொடர்ந்து 3-வது முறையாக 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு போட்டியை 6 வெற்றி, 8 தோல்வி என 12 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. இந்த சீசனில் தோனி காயம் காரணமாகி எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இது சென்னை அணிக்கு பின்னடைவானது.

44 வயதை எட்டி விட்டதால் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை அணியின்பந்து வீச்சு பயிற்சி யாளர் எரிக் ஸைமன்ஸ் கூறியதாவது,

'உண்மையிலேயே சீரியசாகத் தான் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களா? நாங்கள் எப்போதும் அந்த நம்பிக்கையுடனே இருக்கிறோம். வலை பயிற்சியில் அவர் பந்து களை அருமையாக அடித்து விளையாடினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகமாக ஓடுவதில் சிரமப்பட்டார். அதனால் தான் அவரால் போட்டிகளில் விளையாட முடியவில்லை. எப்போது முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்கிறார், எப்போது களம் இறங்கும் நிலை யில் உள்ளார் என்பதை அவர் மட்டுமே அறிவார் என்பதை பல முறை சொல்லி இருக்கிறேன். அணிக்கு பங்களிப்பு அளிக்கும் அளவுக்கு தயா ராகவில்லை என்று உணர்ந்தால் நிச்சயம் அவர் விளையாடமாட்டார். அவரை பொறுத்தவரை தனிநபர் சாதனையை விட அணியின் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை அளிப்பார்' என்றார்.