அகமதாபாத்,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.