கிரிக்கெட்

முதல் இங்கிலாந்து ஸ்பின்னர்...வரலாறு படைத்த வில் ஜாக்ஸ்

இலங்கையின் பல்லகெலேவில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கை -இங்கிலாந்து மோதின.

சென்னை,

இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் பவர்பிளே எனப்படும் முதல் 6 ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இங்கிலாந்து ஸ்பின்னராக வில் ஜாக்ஸ் சாதனை படைத்தார்.

இலங்கையின் பல்லகெலேவில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கை -இங்கிலாந்து மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.