கிரிக்கெட்

2027 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா,கோலி விளையாடலாமா? தோனி பதில்

ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.

சென்னை,

இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா , விராட் கோலி சர்வேதச டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடலாமா? என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் கேப்டன் தோனி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

விளையாடுவதற்கு வயது ஒரு விஷயமல்ல. உடல்தகுதியும், வலுவான திறமையும்தான் முக்கியம். ஒருவருக்கு 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டது என்பதற்காக அவர் விளையாட தகுதி அற்றவராகி விடமாட்டார். பெரிய போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது அவசியம். என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT