கிரிக்கெட்

ராஞ்சியில் இருந்து பார்டர்-கவாஸ்கர் போட்டி மாற்றமா?

ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சவுரப் திவாரி மறுத்துள்ளார்.

ராஞ்சி,

2027-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ராஞ்சி மைதானம் நீக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களை ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சவுரப் திவாரி மறுத்துள்ளார்.

ராஞ்சியில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டியை வேறு மைதானத்துக்கு மாற்ற இந்திய அணி நிர்வாகம் விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, குளிர்காலத்தில் ராஞ்சியில் சூரியன் மறையும் நேரம் காரணமாக போட்டியில் முழுமையாக 90 ஓவர்களை வீசுவதில் சிக்கல் ஏற்படலாம் என்ற கவலை தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் கூறின.

ஆனால் இந்த தகவலை சவுரப் திவாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மைதானத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ.க்கு யாராவது கடிதம் எழுத வேண்டுமென்றால், அது நானாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி எந்த கடிதமும் எழுதவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அட்டவணைப்படி, இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் 4-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT