கிரிக்கெட்

இப்படியும் நடக்குமா.. 50 ஓவரில் 822 ரன்கள்... கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்திய போட்டி

மடெம்போ 143 பந்துகளில்  302 ரன்களைக் குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

சென்னை,

ஜிம்பாப்வேயில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்கார்பியன் கிரிக்கெட் கிளப் - மீத்தேன் லயன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஸ்கார்பியன் அணியின் கேப்டன் பிரைஸ் மகாசா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஸ்கார்பியன் அணி 50 ஓவர்களில் 822 ரன்களைக் குவித்து அனைவரையும் மலைக்க வைத்தது. ஸ்கார்பியன் அணியில் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக மடெம்போ 143 பந்துகளில்  302 ரன்களைக் குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதில் 50 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். 

பின்னர் விளையாடிய மீத்தேன் லயன்ஸ் அணி வெறும் 28 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ஸ்கார்பியன் அணி 794 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. 

50 ஓவர்களில் 300 ரன்களுக்கு மேல் அடிப்பதே அணிகளுக்கு கடினமாக இருக்கும் வேளையில் அதிகபட்சமாக 822 ரன்கள் குவித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.